Sunday 28 July 2013

கூரைப்புடவை

மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.

Generally, marriage sarees were prepared at a place called Koranadu near Mayuram. Koranadu Saree is subsequently changed into “Koora Pudavi” in spoken language.  This saree is waived beautifully with thread with red squares.  Koorai Saree should be made of normal thread only. Now-a-days, because of having more money and to be proud, people are spending thousands of rupees just to add sin to their credit


மேலே சொன்ன 10 விஷயங்களை கூறிவிட்டு,(1966 இல் ) பரமாச்சார்யாள் இட்ட உத்தரவு:

என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்
”.


S S Krishnan, Chennai


Saturday 27 July 2013

திருமங்கல்ய தாரணம்

விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9 - 10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்
.

Holy Knot

Marriage is not only tying the holy knot.  There is no vedic mantras for tying the knot and it has only some slogas.  The proceeding happening with Vedic Mantras are most important.  If it is decided that marriage muhurtham is between 0900 to 1030 hours, generally, tying the holy knot happens initially and everyone leave the place after seeing this immediately.  Actual marriage proceeding starts after this only.  We are not finding many people to witness this.  We have to complete all proceedings of marriage including “Sapthapathi” within the marriage period.


S S Krishnan, Chennai

Friday 26 July 2013

வரவேற்பு (Reception)

முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்


Reception

Conducting marriage reception on the eve of marriage is wrong.  Before completing marriage processes, asking bride and groom to sit / stand together is wrong and is against our culture.


S S Krishnan, Chennai 

Thursday 25 July 2013

விவாஹப் பணம் (Dowry)

மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.
 

Dowry


Asking dowry is against Sastras.  Further, bridegroom should complete all “Vridham” in his house itself before coming to the marriage hall.  Doing such “Vridham” is the responsibility of bridegroom and they had to bear the cost.  If it did like this, groom can come to the marriage hall in the morning hours of marriage day.  On reaching marriage hall, they can start directly the proceeding of marriage.  Marriage to be conducted with more vedics and with the witness of Fire God.  By doing this one can control expenditure and the amount saved can be used for conducting marriage of poor people.

S S Krishnan, Chennai

Wednesday 24 July 2013

பட்டு (Silk )


விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.



Silk Cloth


As marriage is holy & during marriage we should avoid doing any sin.  By killing thousands of silk worm, silk thread is taken out to make silk cloth.  If one uses this kind of silk clothe during marriage, it leads to commit sin.  This is not good for newly married couple.  That is why Paramacharya asks everyone to avoid wearing Silk cloth. 

S S Krishnan, Chennai